By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைப்பு
தமிழ்நாடுமதுரை

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைப்பு

Last updated: July 2, 2026 7:12 pm
July 2, 2026
22 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 2 –

தென் தமிழகத்தில் முதன்முறையாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் காது, மூக்கு, தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர்கள், மைக்ரோடியா (Microtia) எனும் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த 16 வயது சிறுவனின் காதை, அவனது விலா எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்துள்ளனர். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, பொதுவாக பல கட்டங்களாகச் செய்யப்படும் இந்த சிக்கலான 3D காது மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை, மருத்துவக் குழுவினர் ஒரே கட்ட அறுவை சிகிச்சை அமர்வில் வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். வலியையும், மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் குறைத்து, விரைவான குணமடைதலுக்கு இதுவழிவகுத்துள்ளது.

இந்த மேம்பட்ட நுட்பத்திற்காக ஜப்பானில் சிறப்புப் பயிற்சி பெற்ற காது, மூக்கு, தொண்டை (ENT) சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் D.R நாகேஸ்வரன் அறுவைசிகிச்சை குழுவிற்கு தலைமை வகித்தார். இது குறித்துப் பேசிய டாக்டர் நாகேஸ்வரன், சுமார் 10,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இயல்பான காது வளர்ச்சி இல்லாத (மைக்ரோடியா) பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறினார்.

குறிப்பிட்ட சமூகங்களில் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நடக்கும் திருமணங்கள் காரணமாக, தமிழ்நாட்டில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. முகத்தில் தெரியும் இந்தக் குறைபாடால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும்பெரும் சுமையை சுமத்துகிறது. மனித உடலில் 12 இணை விலா எலும்புகள் இருந்தாலும், இந்த அறுவை சிகிச்சைக்குச் சில குருத்தெலும்புப் பகுதிகள் மட்டுமே தேவைப்படுகின்றன.” என்று டாக்டர் நாகேஸ்வரன் விளக்கினார்.

“இந்த சிறுவனுக்கான சிகிச்சையில், நாங்கள் நான்கு விலா எலும்புகளிலிருந்து மட்டுமே குருத்தெலும்புகளை எடுத்தோம். இந்த அறுவை சிகிச்சையினால் குருத்தெலும்பு எடுக்கப்பட்ட இடத்தில் மிகச்சிறிய தழும்பே ஏற்படும்; மேலும் இது விலா எலும்புக்கூட்டின் வலிமையையோ அல்லது நிலைத்தன்மையையோ பாதிக்காது,” என்று அவர் மேலும் கூறினார். மைக்ரோடியாவுடன் தொடர்புடைய கேட்கும் திறன் குறைபாட்டை ஆரம்பகாலத்திலே கவனித்தால், பெரும்பாலும் சரிசெய்ய முடியும் என்பதையும் டாக்டர் நாகேஸ்வரன் வலியுறுத்தினார்.

“காக்லியர் இம்ப்ளான்டேஷன் மற்றும் பிற செவித்திறன் மீட்பு வழிமுறைகள் உட்பட, கேட்கும் திறனை மீட்டெடுப்பதில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை, பொருத்தமுள்ளதாக கருதப்படும் குழந்தைகளுக்குச் செவிக்கிறனை மேம்படுத்துவதில் சிறந பலன்களை அளிக்கும்.”என்று கூறினார்.

இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை விளக்கிய மருத்துவ நிர்வாகி டாக்டர் B. கண்ணன். அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தைப் பற்றி நாங்கள் “எமது மருத்துவர்கள் குழுவின் பெருமிதம் கொள்கிறோம். தென் தமிழகத்தில் இவ்வளவு சிக்கலான 3D காது மறுசீரமைப்பு சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு
சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா

July 28, 2024
149 Views
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.
தி வேலூர் டவுன் டவுன் கேப் திறப்பு விழா
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குடிநீர்
மாவட்ட ஆட்சியத்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account