தஞ்சாவூர், அக்டோபர் 9 –
தஞ்சாவூர் அடுத்துள்ள மானோஜிப் பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 49 லட்சம் செலவில் 2 கூடுதல் வகுப்பறைகள் திறக்கப்பட்டன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நபார்டு வங்கி திட்ட நிதி உதவியுடன் ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மவுலி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தனர்.



