நாகர்கோவில், மார். 11 –
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழாவானது 01.03.2026 ம் கொடியேறி நடைபெற்று வந்தது. மேலும் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பாக
சிசிடிவி கண்காணிப்பு, கண்காணிப்பு கோபுரங்கள், மே ஐ ஹெல்ப் யு, மூன்றடுக்கு கடற்கரை பாதுகாப்பு, முதலுதவி ஏற்பாடுகள், பக்தர்களுக்கு வழிகாட்ட பேனர்கள் அமைப்பு, பாதுகாப்பு எண்கள், பீப்பாயில் வைக்கப்பட்ட கடல்நீர், தற்காலிக பேருந்து நிறுத்தம் செய்யும் இடங்கள், பார்க்கிங் வசதிகள், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் மண்டைக்காடு திருவிழா கூட்ட நெரிசலில் காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்கள், மணிபர்ஸ் ஆகியவற்றை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
மேலும் பக்தர்கள் எந்த இடையூறு இன்றி தரிசனம் செய்யும் வகையில் போக்குவரத்து வசதிகள் மற்றும் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.



