களியக்காவிளை, ஜூன் 29 –
களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை, பரம்புக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலையன் மகன் சோபன் (38). கம்பியூட்டர் விற்பனையாளர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் (31) என்பவரும் காதலித்து கடந்த 2019 ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்துக்கு பின் சோபன் அவரது தாயார் சாரதா (60) ஆகியோர் சேர்ந்து அப் பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனராம். இதுகுறித்து அவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோபன், அவரது தாயார் சாரதா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


