கன்னியாகுமரி , அக் : 10
இதையொட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலையில் தீபாராதனையும், இரவு வெள்ளிப் பல்லக்கில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



