கன்னியாகுமரி, ஆக. 03 –
அஞ்சுகிராமத்தை அடுத்த பால் குளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி – முதல்வர் முனைவர் க.சரோஜா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய மொழிகள் மற்றும் பிறமொழிகள் புலமுதல்வரும்,
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஆங்கிலத் துறை தலைவருமான முனைவர் ச. பிரபாகர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.



