திருப்பூர், செப்டம்பர் 16 –
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பாலசமுத்திரம்புதூர், கணபதிபாளையம், படியூர், தம்மாரெட்டிபாளையம் ஊராட்சிகளுக்கு படியூர் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் மோகனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (காங்கேயம்) அனுராதா, ராஜேந்திரன் மற்றும் திமுக காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், முன்னாள் படியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முக சுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள், துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



