திருப்பத்தூர், செப். 11 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் – அழிஞ்சிகுப்பம் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா. 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சி. சிவ சௌந்தரவல்லி தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.ன். அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு பொதுப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை எ.வ. வேலு கலந்து கொண்டு உயர் மட்ட மேம்பாலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுய உதவி குழு பெண்களுக்கு 2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டு பின்னர் பட்டா மாறுதல், பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆணைகள் பயனளிக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அம்முலு விஜயன், மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அகரம் சேரி ப.ச. சுரேஷ்குமார்,
பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.டி. சீனிவாசன், மாதனூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பொன். ராஜன்பாபு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே. பிரபாகரன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர்.எஸ். நவீன்குமார், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி. அசோக், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேசன்
நாச்சியார் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பிரபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



