நாகர்கோவில், பிப். 9 –
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). கேமராக்கள் பழுது தீர்க்கும் செய்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி கார்த்திக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கார்த்திக் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தங்கம் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்திருந்தார்.
இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் கார்த்திக் பிரேத பரிசோதனை அறிக்கையை கைப்பற்றி விசாரணை மேற்கண்ட போது, அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. சம்பவம் நடந்த அன்று கார்த்திக்கிடம் அதே பகுதியை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் (46), முத்துக்குமார் (34), ஜெய்சிங் (45), வளன் (46) ஆகிய 4பேரை பிடித்து விசாரித்த போது, சம்பவத்தன்று கார்த்திக் குடித்துவிட்டு தகராறு ஈடுபட்டு தாக்குதல் கூறினார்கள். அப்போது கார்த்திக்கு தவறி கீழே விழுந்ததாகவும், அனைவரும் வீடு சென்ற தாவும் கூறினர். மேலும் இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும் கூறினர். பின்னர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவர் தலைமுறைவாகியுள்ளார். அவரை பிடிக்கவும் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.


