ஈரோடு, மே 20 –
கர்நாடக மாநிலம் மைசூரில் தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் மற்றும் ஷிப் ஷாப் போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் 15 மாநிலங்கள் பங்குபெற்றன. அதில் தமிழ்நாடு ஏரோபிக்ஸ் மற்றும் ஹிப்பாப் அசோசியேஷன் சார்பில் தலைவர், செயலர் ஜீவா சுரேஷ், லதா சுரேஷ் தலைமையில் கோபி, சத்தி, கருர் மற்றும் கோவையை சார்ந்த 104 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த இந்த போட்டிகளில் தமிழகத்தை சார்ந்த வீரர்கள் 37 தங்கம், 21 வெள்ளி, 18 வெண்கலம் என 76 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தனர். இதன் மூலமாக கலந்து கொண்ட மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. பதக்கங்களை குவித்த ஏரோபிக்ஸ் வீரர் வீராங்கனைகளை அணி கேப்டன்கள், மற்ற மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் மற்றும் போட்டி நடத்தியவர்கள் பெரிதும் பாராட்டினர்.



