திருவெண்ணெய்நல்லூர், ஆகஸ்ட் 01 –
திருவெண்ணெய்நல்லூர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நகர மாணவரணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பொன். கௌதம சிகாமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் இவர்களின் மகனுமான ராஜ்குமார் என்பவரை திமுக நகர மாணவரணி அமைப்பாளராக நியமனம் செய்து திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் ஹரிபாபு, குலசேகரன், எழில் ராஜா, வீரக்குமாரன், ஷாருநிஷா ஆகியோர் நகர மாணவரணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இவர்கள் அனைவரும் நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதம சிகாமணியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.