திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 07 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் எம்எல்ஏ, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ்கொண்டான், இன்பத்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனை குறித்து சிறப்புரையாற்றினர். இதில் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.