திருவள்ளூர், ஜூலை 13 –
தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்லவில்லை, ஆந்திர மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை தான் தமிழகத்திற்குள் கொண்டு வருகிறோம். டிப்பர் லாரிகளுக்கு மற்ற மாவட்டங்களுக்கு ஒரு சட்டம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு சட்டமா, என டிப்பர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டறை பெருமந்தூர் சத்யா பேட்டி.
நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மூலம் இன்று நடைபெற்ற வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உடனடியாக தமிழக அரசு மணல் மற்றும் சவுடு மண் குவாரிகளை திறக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து உரிய அனுமதியுடன் இயங்கும் குவாரிகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரும் கனிம வளங்களை இடையூறு இல்லாமல் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரும் மலை மண் மூலம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்கும் பட்சத்தில் நெடுஞ்சாலை பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் அதற்கு அனுமதி தர வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இயல்பாக லாரிகள் இயக்குகின்றது அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் இயங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக டிப்பர் லாரி தொழில் நடைபெற்று வருகிறது. தயவு செய்து அரசு இதனை கனிவுடன் பரிசளித்து அனுமதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.



