திருப்பூர், அக். 06 –
தமிழக மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசினா சையத் ஆலோசனையின்படி மாநகர மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி V. ஆஷா தலைமையில் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் பவன்யில் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவிக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் ஒன்றிய அரசு ஓட்டு திருட்டை கண்டித்து விளக்கிக் கூறி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை மாநகர் மாவட்ட மகளிர் நிர்வாகிகள் இடம் அதிகப்படுத்தக் கோரி ஆலோசனைக் கூட்டம் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
துணைத் தலைவி சம்சாத் பேகம், பொருளாளர் சுலோச்சனா, பொதுச் செயலாளர்கள் தனபாக்கியம், சுகந்தி, செயலாளர்கள் அப்ரோஸ், ஜஹான் பேகம், ராதா, கமலம், சமூக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் D. ரெபேக்கா டார்த்தி திவ்யாளினி, வார்டு தலைவிகள் சாந்தி, குருவு, வள்ளிநாயகம், சரஸ்வதி, பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.



