By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!

Last updated: April 27, 2026 7:27 pm
April 27, 2026
41 Views
Share
SHARE

திருப்பூர், ஏப்ரல் 27 –

இந்தியாவின் தனியார் துறை வங்கிகளுள் செழுமையான பாரம்பரியத்தையும், சிறப்பான செயல்பாட்டையும் கொண்டிருக்கும் கரூர் வைஸ்யா வங்கி (KVB), திருப்பூர் மாநகரில் தனது புதிய கோட்ட அலுவலகத்தை இன்று திறந்துள்ளது. வங்கியின் நிர்வாக பணிகளையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் செயல்பாடுகளையும் மேலும் சிறப்பாகவும், துரிதமாகவும் வழங்க வேண்டுமென்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்த கோட்ட அலுவலகத்தை இவ்வங்கி நிறுவியிருக்கிறது.

“இந்தியாவின் பின்னலாடை நகரம்” என்று அழைக்கப்படும் திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு இவ்வங்கி அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முக்கியமான நடவடிக்கை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் உள்ளூர் அளவிலேயே கடனுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரமும், மூத்த அதிகாரிகளின் அணுகலும் இப்பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களுக்கும், தொழில்துறை நிறுவனங்களுக்கும் எளிதாக கிடைப்பதை இவ்வங்கி இந்நடவடிக்கையின் மூலம் உறுதி செய்திருக்கிறது.

திருப்பூரின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு அதனை நிறைவேற்றும் நோக்கத்தோடு இந்த புதிய கோட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, திருப்பூர் மண்டலத்தில் கரூர் வைஸ்யா வங்கி 37 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. ஜவுளி மற்றும் பின்னலாடைகள் ஏற்றுமதியில் உலக அளவில் சிறந்து விளங்கும் திருப்பூர் மாநகரில், ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளன. இவைகளுக்கு விரைவாக கடன்/நிதி வசதிகளும், சிறந்த நிதி ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. இந்த புதிய கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதால் வங்கியின் மூத்த அதிகாரிகளும் நிதித்துறை நிபுணர்களும் உள்ளூர் அளவிலேயே பணியாற்றி துரிதமான சேவையை வழங்குவதால், உள்ளூர் தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு மிக விரைவாக வணிகக் கடன்களும் நிதி சேவைகளும் கிடைக்கும்.

கோட்ட அலுவலகத்தின் திறப்பு விழாவில், கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. ரமேஷ் பாபு பேசுகையில், “இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் திருப்பூர் பிராந்தியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எங்கள் வங்கியின் புதிய கோட்ட அலுவலகத்தை தொடங்கியிருப்பதன் மூலம், நிர்வாகப் பணிகள் மற்றும் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் பெற்ற குழுக்களை வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் கடன் விண்ணப்பங்கள் மிக விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல்கள் வழங்கப்படும். மேலும், உள்ளூர் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் பிற நாடுகளோடு போட்டிபோடவும், மேலும் வளர்ச்சி அடையவும் தேவையான சிறப்பான நிதி சேவைகள் உடனடியாக கிடைக்கும்” என்று கூறினார்.

பாரம்பரிய வங்கி சேவையின் நம்பகத்தன்மைக்கும் மற்றும் நவீன யுகத்தில் வேகமான வணிக செயல்பாடுகளுக்கு இடையிலுள்ள இடைவெளியைக் குறைக்கும் பணியை இந்த புதிய அலுவலகத்தின் மூலம் கரூர் வைஸ்யா வங்கி தொடர்ந்து வழங்கும். 110 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட வங்கியின் இந்த புதிய அலுவலகத்தின் மூலம், இப்பகுதியின் வணிகர்களும், தொழில்நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மற்றும் வர்த்தக நிதிச் சேவைகளின் விரிவான தொகுப்பை மிக எளிதாகவும், விரைவாகவும் பெற்று பயனடைய முடியும்.

கரூர் வைஸ்யா வங்கி பற்றி: 1916-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூர் வைஸ்யா வங்கி, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 902 கிளைகளும், 2,228-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்களும் உள்ளன. 31.12.2025 நிலவரப்படி, இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 2,11,647 கோடி என்ற அளவில் இருந்தது. இதில் வைப்புத்தொகை ரூ. 1,14,595 கோடி, மற்றும் வழங்கப்பட்ட கடன்கள் ரூ. 97,052 கோடி என்ற அளவில் இருந்தன. 2026-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 690 கோடியாகவும், நிகர வாராக்கடன் 0.19% ஆகவும் உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
கிள்ளியூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின விழா
கருங்கல் அருகே 3ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை

April 18, 2025
55 Views
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோவில் நவராத்திரி விழா
தருமபுரி உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை
உதவி ஆய்வாளர் சோபன ராஜுக்கு பிரிவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account