திருச்செந்தூர் , நவ : 10
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரமும், 16ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. விழாவையொட்டி சுமார் 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக 11 இடங்களில் நிழற்கூடங்கள், 300 தற்காலிக கழிவறைகள், 10,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி மற்றும் 493 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி மற்றும் கூடுதல் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



