திருச்சி, மே 11 –
திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரை நடந்த 41 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 80 சவரன் தங்க நகைகள், ஒரு வைர மோதிரம், ஒரு வைரத்தோடு 49,700 ரூபாய் ரொக்கம், 8 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநகரத்தினம் நேற்று இந்த மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.


