திண்டுக்கல், அக். 1:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை, மாவட்ட ஆட்சியர் திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களிடையே எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாவட்ட சுகாதார அலுவலரும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலருமான செல்வகுமார், மாவட்ட திட்ட அலுவலர் முகமது பரூக், மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



