நாகர்கோவில், ஆக. 27:
நாகர்கோவில் கிழக்கு மாவட்ட தவெக அலுவலகத்தில், மாற்றுக்கட்சியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட த.வெ.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி தலைமையில் மாற்றுக்கட்சியினர் கட்சியில் இணைந்தனர். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலையில், நாகர்கோவிலை சேர்ந்த டி.முருகன், சி.ஐயப்பன், ஜி.ஐ.சுவாமி, சுரேஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. நிர்வாகி கிருஷ்ணன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



