தருமபுரி, ஜூன் 30 –
கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக ஒன்றிய, நகர, பேரூர் வாக்கு சாவடி வாரியாக பூத் டிஜிட்டல் ஏஜென்ட் பாகநிலை முகவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆகியோருக்கு பயிற்சி பாசறை கூட்டம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபம் மற்றும் பென்னாகரம் காரல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டங்களுக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மசெல்வன், இன்ப சேகரன், தருமபுரி தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன், பென்னாகரம் தொகுதி பார்வையாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கௌதம் வரவேற்றார்.
இந்த கூட்டங்களில் பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள் ஆகியோருக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர்கள் உதயசூரியன், ஈஸ்வர் ஆகியோர் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாநில நிர்வாகி தாமரைச்செல்வன், நகர செயலாளர் நாட்டான் மாது மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள் கலந்து கொண்டனர்.