தருமபுரி, மே 14 –
தருமபுரி நகரில் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 3 மதுக்கடைகள் மற்றும் வெங்கடசமுத்திரத்தில் 2 கடைகள் என தருமபுரி மாவட்டத்தில் 5 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதற்கு வரவேற்பு தெரிவித்தும், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நகர செயலாளர்கள் சிட்டி சுரேஷ், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யா வீரமணி, நகர மகளிர் அணி செயலாளர் செல்வி, நகர துணைச் செயலாளர் கவியரசி, கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.



