தருமபுரி, அக்டோபர் 06 –
தருமபுரி தொடக்க வேளாண்மை மண்டல இணைப்பதிவாளர் அலுவகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அணைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன், மாநில பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும். 2021-ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அணைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
மாவட்ட பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
நகை மதிப்பீட்டாளர்கள், கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் விநியோகிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அங்காடிகளுக்கு தனித்தனியாக பி.ஓ.எஸ் இயந்திரங்கள், செல்போன் மற்றும் இணைய வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மகளிர் பணிபுரியும் இடங்களில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டாத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி அணைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆண்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



