பெரியகுளம், ஜூன் 23 –
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள ஸ்ரீ மார்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேனி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராம்பாண்டியன், லக்கி குழுமம் உரிமையாளர் சேக் அலி, பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சபரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 52 மரக்கன்றுகள் நடப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், சந்தோஷ்ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில் பெரியகுளம் நகர நிர்வாகிகள், வடுகபட்டி பேரூர் நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



