தருமபுரி, அக்டோபர் 29 –
தருமபுரியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலித் குழுவின் பரிந்துரையின்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் மோசடியாக பணி நிரந்தரம் செய்ததனால் பாதிக்கப்பட்ட உண்மையான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆனந்தன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
காலித் கமிஷன் காலத்தில் உண்மையாக உழைத்த ஒப்பந்த தொழிலாளர்களை உரிய கள விசாரணை செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வாரிய பணி வழங்க வேண்டும் . 31/ 3 /1996 அன்று விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என, பணி புரிந்த பனிக்காலத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் விசாரணையின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களும் காலித் கமிஷன் பரிந்துரையின்படி வழங்க வேண்டும்.
மின்வாரியத்தின் அடிப்படை பணிகளைப் பற்றிய குறைந்தபட்ச அனுபவம் கூட இல்லாதவர்கள் மோசடி பணி நியமனம் பெற்று பலதரப்பட்ட உயிர்களை பலி வாங்கிய பணியாளர்களை காவல் துறை மூலம் கொலைக் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட வேண்டும். மோசடியாக பணியில் சேர்ந்தவர்களை விசாரணை செய்து, அடையாளம் கண்டு அவர்களுக்கு வாரியம் வழங்கிய பணப் பலன்களை திரும்ப பெற்று, வாரிய கணக்கில் செலுத்தப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னுரங்கன் சிறப்புரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ராஜேந்திரன், முத்து, செல்வராஜ், வரதன், வெங்கடேசன், சம்பத், தங்கமணி, ராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



