தஞ்சாவூர், ஆகஸ்ட் 3 –
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வே று கோரிக்கைகள் வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை மந்திரி காவிரி பிரச்சனை தமிழ்நாட்டில் உரிமைகளை பறிக்கின்ற வகையில் பேசியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர் சந்திரகுமார், பாலசுந்தரம், பக்கிரி சாமி, பாஸ்கர் சேவையா, விஜயலட்சுமி, கண்ணகி, முகில் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் மாநகர செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.



