நாகர்கோவில், ஆக. 23 –
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அஞ்சல் துறையின் சார்பாக தபால் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக (தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா) “Deen Dayal SPARSH Yojana” என்னும் உதவித்தொகை திட்டம் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ/மாணவியருக்கு நடத்தப்படுகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா தேர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இத்தேர்விற்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தங்கள் பள்ளியின் மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் Philately School Club ல் உறுப்பினராக அல்லது Philately Deposit Account வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். புதிதாக Philately Deposit Account நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் ரூ.200/- செலுத்தி தொடங்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.Indiapost.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025. அனுப்ப வேண்டிய முகவரி: “The Superintendent of Post offices, Kanniyakumari Division, Nagercoil – 629001”. முதல் கட்ட (எழுத்து வினாடி வினா) போட்டி நடைபெறும் நாள்: 20.09.2025. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர் தபால் தலை சேகரிப்பு – Philately என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கையினை (Project ) சமர்ப்பிக்க வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியருக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.



