ராணிப்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர கூட்டாய்வு பணி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வருடாந்திர ஆய்வு செய்யும் பணியினை நேரில் சென்று மேற்கொண்ட பின்னர் பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பான முறையிலும் வேகம் விவேகம் அல்ல என்ற நினைவை கருத்தில் கொண்டு மாணவ மாணவிகளை இறக்கும் போதும் ஏற்றும்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும் மேலும் வாகனங்களில் பாதுகாப்பு அறிவுரை வழங்கினார்.
அதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சங்கள் வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அனுமதி மறுக்கப்படும் எனஎச்சரித்தார்.
இந்த நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.