தஞ்சாவூர், ஜூலை 27 –
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக ஜெ.ஆர்.சி. ஆசிரியர்களுக்கான ஒருநாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி ஆணையின்படியும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ்குமார் வழிகாட்டுதலின்படியும் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரமோகன் ஜெ.ஆர்.சி. கொடி யேற்றி வைத்து முகாமை துவக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். ஜே ஆர் சி திருச்சி மண்டல மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் பிச்சைமணி ஜே ஆர் சி வரலாறு பற்றியும், பள்ளிகளில் கழிவு மேலாண்மை & பசுமைப் பள்ளிகள் பற்றியும் விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர் மாவட்ட இணை கன்வீனர் . ஜேசுதாஸ் தமிழ்மாறன் நிழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக பட்டுக்கோட்டை ஒன்றிய பொருப்பாளர் புவியரசு அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பட்டுக்கோட்டை ஹார்ட் ஃபுல்னஸ் அமைப்பினர் தியானம் மற்றும் யோகா பயிற்சி வழங்கினர்.
முகாமில் சிரமேல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சேவைப்பணி பற்றி உரையாற்றி, பாடல்கள் பயிற்சியும் சிறப்பாக வழங்கினார். மேலும் முகாமில் குருதி தானத்தின் இன்றியமையாமை பற்றியும் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் நடைபெற வேண்டிய ஜெ.ஆர்.சி நிகழ்வுகள் பற்றியும் இணை கன்வீனர்கள் உரையாற்றினர்.
பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவைச்சார்ந்த தலைமைக் காவலர் தினேஷ்குமார் கவுன்சிலர்களுக்கு மது போதைத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். முகாமின் சிறப்பு நிகழ்வாக சென்ற கல்வியாண்டில் பணி ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மதியழகன் அவர்களுக்கும் ஜெ. ஆர். சி. கவுன்சிலர்களுக்கும் மாவட்ட அமைப்பு சார்பாக மரியாதை செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை ஜெ. ஆர். சி. கவுன்சிலர்கள் சிறப்பாக செய்தனர். நிறைவாக பட்டுக்கோட்டை ஒன்றிய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.



