கோவை, செப். 20 –
காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் அறங்காவலர் திரு. ராமகிருஷ்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் கே. ஆர் மருத்துவமனை இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் சி.என்.ரூபா அவர்கள் தொடங்கி வைத்தார்.
கே.ஆர்.மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.திலகம் ராஜேஷ் அவர்களின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இணைந்து இம்முகாமை நடத்தினர். இந்த இரத்ததான சேவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று 40 யூனிட் இரத்தம் தானம் செய்தனர். இந்நிகழ்வை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான திருமதி. உமாபிரியா மற்றும் திரு. அன்பரசன் அவர்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.



