கிருஷ்ணகிரி, ஜூலை 3 –
சாப்ப முட்லூ கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சி சாப்ப முட்லூ
கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு செலுத்தும் முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன், கால்நடை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
பர்கூர் வட்டாட்சியர் சின்னசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், ஒன்றிய செயலாளர் அறிஞர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெகதேவி பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருத்துவர் மகேந்திரன், ரமேஷ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் ரமேஷ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் புவனேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள் பிரேம்குமார், ராஜு, ரோஜா, பேராசிரியர் முனியப்பன், தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசியை செலுத்தி பயனடைந்தனர். இம்முகாமை அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.