நாகர்கோவில், செப்டம்பர் 4 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரும் 27-ம் தேதி 4-வது சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளன. 17 வகைகளில் 45 முறையாக வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலா தளம், பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகச மற்றும் தங்கு முகாம்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சமூக ஊடகங்களில் அதிக தாக்கம் ஏற்படுத்துபவர் மற்றும் சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவினை பிரபலப்படுத்தும் சிறந்த விளம்பர பொருட்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15-ம் தேதிக்குள் www.intourismawards.com இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.



