சுசீந்திரம், அக். 4 –
சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் வருடம் தோறும் சரஸ்வதி பூஜையின் பத்தாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியாக சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறையில் வைத்து அம்புச்சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு நேற்று முன் தினம் பத்தாம் திருவிழாவை முன்னிட்டு முன்னுதித்த நங்கைஅம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வழுக்காம்பரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மரபு படி வைக்கப்பட்டுள்ள இடத்தில் எதிரே மகிஷசுரனாக நினைத்து வாழை மரத்தை வைத்து அதில் அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்பு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சுசீந்திரம் அக்கறை முத்தாரம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்பு வரும் பக்தர்களுக்கு பானகாரம் விபூதி, சந்தனம், குங்குமம், பிரசாதமும் வழங்கப்பட்டு பின்பு அங்கிருந்து அம்மன் புறப்பட்டு சென்றது. அம்மன் செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு முன்பு அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர். சுவாமி விக்ரகம் தானுமாலய சுவாமி கோவில் ரத வீதியை சுற்றி முன்னுதித்தநங்கை அம்மன் கோவில் சென்றடைந்தது. பின்பு அம்மனுக்கு திருஆராட்டு நடைபெற்று கோவில் கருவறைக்கு கொண்டு வைக்கப்பட்டது.



