கோவை, ஜூலை 1 –
கோவை ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வருடம் தோறும் அவரது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த வருடம் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு வாளையாறு பகுதியில் உள்ள வின்னர்ஸ் ஹில் ரெசார்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட் நிறுவனர் சி.கே. கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடி கார் வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர். வாடிக்கையாளர்களுக்கு இந்த ரெசார்ட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று சி.கே. கண்ணன் அவர்கள் விளக்கிக் கூறினார். வாடிக்கையாளர்களை அவரே ஜீப்பில் அழைத்து சென்று ஆஃப் ரோடு ரைடு நடத்திக் காட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், வின்னர்ஸ் ஹில் ரெசார்ட் அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக இங்கு பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஃப் ரோடு ரைடூ, ஸ்விம்மிங் ஃபூல், இயற்கை எழிலுடன் அமைந்த மலைப்பகுதி, குழந்தைகள் விளையாடக்கூடிய பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட அறைகள், ஹார்ஸ் ரைட், சுமார் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சமைக்கும் நவீன உணவுக்கூடம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. திருமணம், பிறந்தநாள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தும் அளவிற்கு இந்த இடம் உகந்ததாக இருக்கும் என்றார்.
கோவை ஆடி கார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.