By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை!

Last updated: September 2, 2026 5:29 pm
September 2, 2026
27 Views
Share
SHARE

வன ஆர்வலரின் கேமராவில் சிக்கியதால் பரபரப்பு

மார்த்தாண்டம், செப். 2:
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு கோதையாற்றில் ராட்சத முதலை ஒன்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், பல மாதங்களாக வனத்துறையினரின் பல்வேறு முயற்சிகளுக்கும் அது சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. கோதையாற்றின் உறைகிணறு பகுதியில் முதலை கிடந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதனைப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் முதலை சிக்காததால் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.

இதற்கிடையே, முதலை அவ்வப்போது கோதையாற்றில் தண்ணீரில் மிதந்து செல்வது பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த முதலையைப் பிடிக்கும் நிபுணர்கள் கடந்த மாதம் முதல் கோதையாற்றில் முகாமிட்டு, முதலை நடமாட்டத்தை கண்காணித்து அதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு உத்திகளை கையாண்டும் இதுவரை முதலை அவர்களின் கண்களில் சிக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த வன ஆர்வலரும் மலையேற்ற வீரருமான மகாதேவன் (42), நேற்று முன்தினம் கோதையாற்றின் செங்குழி பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் கரையில் நின்றிருந்தபோது, தண்ணீரில் ஒரு முதலை மிதந்து செல்வதை அவர் கவனித்தார். உடனடியாக தனது கேமரா மூலம் அந்த காட்சியை பதிவு செய்தார்.

முதலில் ஆற்றின் நடுப்பகுதியில் தண்ணீரில் மிதந்தபடி சென்ற முதலை, பின்னர் ஆற்றின் ஒரு கரையை நோக்கிச் சென்று கரையில் ஏறிய காட்சியும் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் முதலை இருக்கும் இடத்தை கண்டறிந்து அதனைப் பிடிக்க உதவக்கூடும் என்பதால், அவற்றை சென்னையைச் சேர்ந்த முதலை பிடிக்கும் நிபுணர்களிடம் வழங்க மகாதேவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல மாதங்களாக வனத்துறையினருக்கும் முதலை பிடிக்கும் நிபுணர்களுக்கும் போக்கு காட்டி வந்த ராட்சத முதலை தற்போது வன ஆர்வலரின் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனால் கோதையாற்றில் முதலை நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுரை

August 5, 2026
35 Views
வேலூர் மாநகராட்சியில் குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்!
கிருஷ்ணகிரியில் இ.பி.எஸ்., திட்டவட்டம்
தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account