நாகர்கோவில், ஏப். 18 –
அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 20ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குளச்சலுக்கு வருகை தருகிறார்.
மறுநாள் காலை 10:30 மணி அளவில் அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ராகுல் காந்தி வருகைக்காக மண்டைக்காடு அருகே அமைந்துள்ள லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஹெலிப்பேடு தளமும் மற்றும் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் தற்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராகுல் காந்தி வருகையொட்டி குமரி மாவட்ட காவல்துறையினர் லட்சுமிபுரம் கல்லூரி மைதானம் மற்றும் குளச்சல் சுற்று பகுதி முழுவதும் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மைதானத்தில் முன்னேற்பாடு பணிகளை காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.



