கிருஷ்ணகிரி, செப். 5 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மறைந்த
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள
விஜய் இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்
கலந்து கொண்ட விஜய் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனரும், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான துரை என்ற துரைசாமி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர். இராதாகிருஷ்ணனின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக பணியாற்றி இந்திய நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதியாக உயர்ந்த சர்வபள்ளி டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளினை ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம் என்பதை மாணவிகளான நீங்கள் நன்கு உணர்ந்து படித்தால் டாக்டர். இராதாகிருஷ்ணன் போல உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என துரை என்ற துரைசாமி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் நர்சிங் மாணவிகள் கேக்வெட்டி கொண்டாடியதோடு ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த விழா ஏற்பாடுகளை ஆசிரியர்களான உமேராபேகம், நகியா ஆகியோர் செய்து இருந்தனர். ஜெனீவி, கிருத்திகா, காவியா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



