கிருஷ்ணகிரி, ஜூன் 4 –
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள காவாப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சகஸ்ரநாமம் என்பருக்கும் நிலத்தகராறு கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெல் அறுவடை செய்யும் பணியில் சகஸ்ரநாமத்தின் தரப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று தடுத்துள்ளார். அப்போது அங்கு இருந்த கோவிந்தசாமி, ஜெயகுமார், மாரியப்பன், வெங்கடேசன், ஜெகநாதன் ஜெகதீஷ்வரி ஆகியோர் அங்கு இருந்த கம்பி மற்றும் மரக்கட்டையை கொண்டு கிருஷ்ண மூர்த்தியை கை, கால் போன்ற இடங்களில் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கொலை வெறி தாக்குதலில் சுய நினைவு இழந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக
நாசரம்பட்டி காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ஆனந்தலட்சுமி கொலை வெறிதாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்து உள்ளனர். ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எந்த சம்மந்தமும் இல்லாத ஆனந்தலட்சுமி அவரது மகள் சன்மதி, மருகன் சிலப்பரசு ஆகியோர் மீது பெய்யான வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளதால் பெரும் மன உழச்சலுக்கு ஆளாகி உள்ள கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி ஆனந்த லட்சுமி, அவரது மகள் சன்மதி ஆகிய மூன்று பேரும் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரையை சந்தித்து புகார் மனுவினைக் கொடுத்தனர்.
மேலும் இது குறித்து பேசிய கிருஷ்ணமூர்த்தி நிலம் தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சகஸ்ரநாமம் என்பருடன் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்து இருந்த நெல் அறுவடை செய்யும் பணியில் சகஸ்ரநாமத்தின் அடியாள்கள் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுக்கும் போது அவர்கள் இருப்பு கம்பியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு வீட்டையும் அடித்து உடைத்துவிட்டனர்.
இது குறித்து நாகரசம்பட்டி காவல் நிலைத்தில் கோவிந்தசாமி, ஜெயகுமார், மாரியப்பன், வெங்கடேசன், ஜெகநாதன் ஜெகதீஷ்வரி ஆகியோர் மீது புகார் கொடுத்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எனது மனைவி, மகள், மருமகன் ஆகியேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் நடு நிலையோடு செயல்படாமல் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் மன உழைச்சல் ஏற்பட்டதால் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையான நீதி விசாரனை நடத்தக்கோரியும் எங்களின் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளதாக வேதனையுடன் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.



