கிருஷ்ணகிரி, ஜூன் 6 –
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் தமிழத்தில் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைந்து வருகின்றனர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தவெக கட்சியில் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி டான்சியில் அமைந்துள்ள மத்திய மாவட்ட தவெக அலுவலகத்தில் மாற்று கட்சியினர்கள் தவெக கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்று, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் முன்னிலையில், திமுக நிர்வாகி மனோஜ், மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அதிமுகவில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அன்பரசு, வழக்கறிஞர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கல்வியரசு, அதிமுகவை சேர்ந்த சித்திக், சிவா, பாஸ்கர், கில்பர்ட், குமரேசன், அங்கன்வாடி ஊழியரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான மஞ்சுளா, மாதம்மாள் மற்றும் செண்பகம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பல்வேறு கட்சிகளில் இருந்து தவெக கட்சியில் இணைந்த அனைவருக்கும் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ் கட்சி துண்டுகளை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்றார். இந்த நிகழ்வின்போது மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ஜி.பார்த்திபன் தொழில் அதிபர் கோல்டன் சுரேஷ், அனிதா கிரைனைட் உரிமையாளர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



