சென்னை, ஏப்ரல் 15 –
கிரியேட் மெடிக் நிறுவனம் சிலிக்கான் கதீட்டர் மற்றும் மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்யும் ஜப்பானிய நிறுவனம் சென்னையில் முதல் அலுவலகத்தை தொடங்கியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக இந்நிறுவனம் சிறுநீரகவியல், இரைப்பை குடலியல், பி.இ.ஜி. பராமரிப்பு ஆகிய துறைகளில் முதன்மை வகிக்கிறது. நோயாளிகளின் சௌகரியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் மிக நவீனமாக சிலிக்கான் அடிப்படையிலான மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. இவர்களது கருவிகள், ஜெர்மனி, பிரிட்டன், இந்தியா, இத்தாலி, கொரியா, சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்பட 50க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
கிரியேட் மெடிக் கம்பெனியின் தலைவர் ஒசாமு இமாஸாவா பேசும்போது, “இந்தியாவில் எங்கள் கருவிகளை விற்பனை செய்வதற்கு என்று ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம். முன்னதாக நாங்கள், மெடி நிப்பான் என்ற எங்கள் வினியோகஸ்தர் வழியாக கருவிகளை விற்பனை செய்து வந்தோம். இப்போது நேரடியாகவே எங்கள் கருவிகளை நாங்களே விற்பனை செய்யவுள்ளோம். இந்தியாவில் மருத்துவ கட்டமைப்புகள் மிக வலுவாக உள்ளன. உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் உள்ளனர்.
மேலும், மக்களுடைய வாங்கும் சக்தியும் மேம்பாடு அடைந்துள்ளதால், இங்கே வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதம் வரைக்கும் இருக்கிறது. இதனால் எங்கள் மருத்துவ கருவிகளை விற்பனை செய்வதற்கான நல்ல சந்தையாக இந்தியாவை கருதுகிறோம். வருங்காலத்தில் இந்தியாவிலேயே கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலைகளை நிறுவி, இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் வரை எங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
மேலும் கிரியேட் மெடிக் இந்தியா நிர்வாக இயக்குநர் கட்சுவாகி யாமனே இந்நிகழ்ச்சியில் உடனிருந்தார்.



