திண்டுக்கல், செப். 22:
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் கீழ், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சியில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் காலை உணவு அருந்தினார். திட்ட இயக்குநர் கங்காதாரணி, முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



