திருப்பத்தூர், மே 28 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரேம சாய் ரத யாத்திரை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சாய்பாபா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க சாய் ரதத்தை வரவேற்று பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை மற்றும் பக்தி பாடல்கள் நடைபெற்றன.
ரத யாத்திரை தேவலாபுரம் கோவிந்தாபுரம் எட்டியம்மன் அம்மன் கோவில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருளாசியை பெற்றனர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் குழுவினர்கள் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



