சேலம், செப். 7:
சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்த பூபதி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனு அளித்தார். அயோத்தியாபட்டினம் அருகே மாசிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் பிளாஸ்டிக் பேப்பர் உருக்கும் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் உருக்கு ஆலையால் விவசாயம், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய பூபதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனு அளித்தார். ஆலையின் மீது உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



