தஞ்சாவூர் மே 5
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்படி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கள் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலையில் திருச்சி மண்டல உணவு பொருட் கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரை யின் பேரில் தஞ்சாவூர் மாவட்டத் தில் உணவுப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950 அறிவிக்கப் பட்டுள்ளது .இது குறித்து தஞ்சாவூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பஸ் நிலையம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் சுவரொட்டியை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.