ஈரோடு, ஜூலை 6 –
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு சாந்தி இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான இந்த சோதனை சுமார் 7 மணி நேரம் நடந்தது.
இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 100 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையொட்டி கணக்கில் வராத பணம் வைத்திருந்ததாக துணை ஆணையாளர் அசோக் குமார், கண்காணிப்பாளர் ராஜகோபால், உதவியாளர் குருநாதன் மற்றும் புரோக்கர்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.


