ஈரோடு, செப். 28:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கூட்டு எல்லைக்காடு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் நகரப் பகுதிகளுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த 30A நகரப் பேருந்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல மைல் தூரம் நடந்து சென்று மாற்றுப் பேருந்துகளைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கூடுதல் பயணச் செலவு ஏற்படுவதுடன், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர். பேருந்து சேவையை மீண்டும் தொடங்கக் கோரி பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களைக் கருத்தில் கொண்டு, நாள்தோறும் குறைந்தது இரண்டு முறையாவது கூட்டு எல்லைக்காடு வழியாக 30A அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி லோகநாதன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Meta Description:
ஈரோடு அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட 30A அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி கூட்டு எல்லைக்காடு பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



