நாகர்கோவில், ஜூன் 10 –
இந்திய அஞ்சல் துறை சார்பில் பேக்கிங் சேவை மாவட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் குமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கா.செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: சிறந்த தரத்தில் குறைந்த செலவில் நம்பிக்கையுடன் பேக் செய்து, இந்தியாவின் எந்த மூலைக்கும் பாதுகாப்பாக அனுப்பும் வசதியை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (35 கிலோ வரை) பார்சல் தபால் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வசதி, இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. இச்சேவை தற்போது கீழ்காணும் அஞ்சலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது: நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகம், கன்னியாகுமரி மற்றும் நெய்யூர், குளச்சல், அருமனை, மார்த்தாண்டம், குழித்துறை போன்ற துணை அஞ்சலகளிலும் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களை நம்பிக்கையுடன் சிறந்த தரத்தில் குறைந்த செலவில் பேக் செய்து, இந்தியாவின் எந்த மூலைக்கும் பாதுகாப்பாக அனுப்ப முடியும். பயனாளர்களுக்கு இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் உங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை நேரில் அணுகியோ அல்லது 9894774410, 9080820107 என்ற
வணிகத் தொடர்பு அதிகாரி தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.