கோவை, ஜூன் 17 –
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. ஆச்சிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜேஜே காலனி பொதுமக்கள் சார்பில் த.வெ.க நிர்வாகிகள் சார ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 25 வருடங்களாக இந்த ஆச்சிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜே ஜே காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
அதில் வரைபடம் எடுத்து பார்த்ததில் கல்லுக்குழி என்ற பெயரில் பட்டா உள்ளது. எங்கள் பட்டாவிற்கு வீடு கட்டுவதற்கான வங்கி கடன் மற்றும் எந்த ஊரு தேவையும் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆகவே எங்களுக்கு நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றித் தருமாறு என்று பொதுமக்கள் சார்பில் த.வெ.க நிர்வாகிகள் முருகேசன் முத்துலட்சுமி, வெங்கடாசலம், சரஸ்வதி, அருள் ஹரிஹரன் ஆகியோருடன் இணைந்து மனு அளிக்கப்பட்டது.



