அரியலூர்,மே:13
அரியலூர் மாவட்டம் அரியலூர் ரயில் நிலையத்திற்கும் சில்லக்குடி ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்த அரியலூர் நகரில் தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் கருணாநிதி(67). இவர், கடந்த 5 மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அரியலூர் ரயில் நிலையத்துக்கும், சில்லக்குடி ரயில் நிலையத்துக்கும் இடையே திருச்சி நோக்கிச் சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார், உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.


