வேலூர், ஜூலை 07 –
வேலூர் அண்ணா சாலை ஏலகிரி அரங்கத்தில் விஐசிடி கம்யூனிட்டி கல்லூரியின் துவக்க விழா நடைபெற்றது. விஐசிடி டிரஸ்டி எஸ். பிரியா வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சென்னை தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் பேராசிரியர் எஸ். ஆறுமுகம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் திருவண்ணாமலை மண்டல மையம்
ஹால்சன் ஆபிஸர் ஆர். ரவி , பேராசிரியர் எஸ். பரஞ்சோதி இந்த சமய அறநிலையத்துறை டிரஸ்டி அருணாச்சலம் தலைவர் சித்தூர் பார்லிமென்ட் எஸ் சி செல் பீட்டர் , திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகம் தலைவர் இக்பால், பேராசிரியர் தமினும் அன்சாரி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக. விஐசிடி கம்யூனிட்டி கல்லூரி பிஸ்மி கல்வி அறங்காவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமிருதீன் நன்றியுரையாற்றினார். உடன் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.