கோவை, மே 21 –
வாஸன் கண் மருத்துவமனை தற்போது இஎஸ்ஐ தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையுடன் இணைந்து கட்டணமில்லா இலவச கண் பரிசோதனை மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஒப்பந்த அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
வாஸன் கண் மருத்துவமனை தற்போது தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையுடன் இணைந்து தற்போது இஎஸ்ஐ பயனாளர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு அட்டையின் மூலம் கண் விழித்திரை சிகிச்சை ஆகிய மேற்கண்ட கண் சம்பந்தப்பட்ட மருத்துவத்தினை எங்களது மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். கீழ்க்கண்ட இதன் அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வாஸன் கண் மருத்துவமனை ஆர் எஸ் புரம் கிளையில் நடைபெற்றது.
இதில் தலைமை மருத்துவர்கள் கண் விழித்திரை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவர் அனுஷா வெங்கட்ராமன் கண்புரை மற்றும் கண்ணீர் அழுத்த நோய் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ஜெயமணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஒப்பந்தத்தின் பயன்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினர்.



